கொடிகாமம் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

315 0

கொடிகாமம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வரணிப் பகுதியில் கிணறு துப்புரவு செய்யும்போது ஆலயக் கிணற்றுக்குள்ளிருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.