ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கொரோனாவின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – நாமல்

325 0

மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அவர் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.