யாழில் அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு ஆரம்பம்

362 0

அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  ஆரம்பமானது.

முதல்வர்கள் மன்றத்தினால், வருடாந்தம் நடாத்தப்படும் இந்த மாநாடு இம்முறை யாழில் நடைபெறுகின்றது.

யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று காலை 9.00மணியளவில் இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் சம்பிரதாய முறைப்படி, மங்கள வாத்தியங்கள் இசைக்க அனைத்து மாநகரமுதல்வர்களும் ஜெற்விங் நோர்த் கேற் ஹோட்டலிற்கு அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து, யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வரவேற்புரையாற்றி, மாநாட்டை ஆரம்பத்து வைத்தார்.

இந்த மாநாட்டில், மாத்தளை, காலி, மட்டக்களப்பு, மாத்தறை, நுவரெலியா, அநுராதபுரம் உள்ளிட்ட மாநகர முதல்வர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, அனைத்து மாநகர முதல்வர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.