இந்திய தேச பிதா மகாத்மா காந்தியின் 151வது ஜனன தினக் கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம் ; பெற்றன.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் சங்கத்தின் செயலாளர் கதிர் பாரதிததாசனும் கலநது கொண்டார்
கொவிட் 19 காரணமாக குறிப்பிட்டவர்களுடன் குறித்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

