கொலன்னாவை பிரதான வீதியிலுள்ள அதிக மின்வலுவைக் கொண்ட மின் கோபுரம் ஒன்றின் மீதேறி, நபர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், அவர் தற்போது பொலிஸார், மின்சார சபை அதிகாரிகளால் கீழிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பகல் 12.30 மணியளவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், தனிப்பட்ட காரணங்களுக்காகவே மின் கோபுரத்தில் ஏறியுள்ளாரென்றும் இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இந்த நபர் மின்கோபுரத்தில் ஏறியவுடன், அந்தப் பிரதேசத்தில் மின்தடை அமுல்படுத்தப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


