யாழில் சூறாவளி அபாய எச்சரிக்கை -அனர்த முகாமைத்துவப் பிரிவு-

291 0

adb5b2c3a37541a30e1bfa83e61f45a4_1461739233-sயாழ்ப்பாணத்தின் வடமேற்காக நகரும் தாழமுக்கமானது சுறாவளியாக மாறும் அபாயம் உள்ளது என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
கரையோரங்களில் உள்ளவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தரும் அறிவித்தல்:-
திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால், இத்தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதே வேளை அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
முதலாம் திகதி நள்ளிரவு இத்தாழமுக்கமானது தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகருமெனவும் 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது.