மட்டு பொலிஸாருக்கு எதிராக ம.உ.ஆ’வில் முறையீடு!

29 0

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப்போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.சங்கரப்பிள்ளை் ஆகிய ஆறு பேரை நீதிமன்றில் 2ம் தகதி ஆஜராகுமாறு கடந்த 27ம் திகதி நீதிமன்றம் ஊடாக அழைப்பானை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்டவர்கள் நினைவேந்தலை அனுஷ்டிக்கவுள்ளதாகவே இந்த அழைப்பானை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அழைப்பாணை விடுக்கப்பட்ட ஆறு அரசியல் தலைவர்களும் இவ்வாறு முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.