யாழில் மினி சூறாவளி

30 0

யாழ்ப்பாணத்தில் இன்று (01) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடொன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து நாசமாகியுள்ளன.

யாழ்குடா நாட்டில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்த நிலையில் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் 4 மணியளவில் இவ்வாறு மினி சூறாவளி தாக்கியுள்ளது.

இதனால் வீட்டின் சுற்று மதில் 450 அடி பாறி வீழ்ந்துள்ளதுடன், பயன் தரு மரங்களான தென்னை, வாழை என்பனவும் முறிந்து வீழ்ந்துள்ளன.