சிறிலங்காவில் மக்கள் இறையாண்மையை இழக்க நேரிடும் – ஐ.தே.க. எச்சரிக்கை

210 0

சிறிலங்காவின் இறையாண்மை மற்றும் பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை பாதிக்க முடியாது என்றும் அரசியலமைப்பின் எந்தவொரு திருத்தத்தாலும் அதை மாற்ற முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையில் அக்கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்த்தன சார்பாக முன்னிலையான சட்டத்தரணி இராஜ் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த திருத்த வரைவின் 3-57 வரையிலான பந்திகள் அரசியலமைப்பிற்கு எதிரானவை என்றும் அத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் இறையாண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த வரைவு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு முற்றிலும் எதிரானது என்று குறிப்பிட்ட சட்டத்தரணி வரைவின் விதிகளின்படி, முழு அதிகாரமும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படுவதனால் நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தின் அதிகாரங்கள் குறைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

இந்த வரைவு சட்டமன்ற மற்றும் நீதித்துறையின் அதிகாரத்தை ஜனாதிபதியின் கைகளில் கொண்டுள்ளமையினால் இந்த வரைவின் விதிகள் மூலம், சட்டத்தின் விதி, நிரைவேற்றுத்துறை மற்றும் நிர்வாகத்தின் மூன்று முக்கிய துறைகளில் சமநிலை ஆகியவை இழக்கப்படும் என்றும் அதுவும் அதிகாரப் பகிர்வு கொள்கைக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த வரைவு இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவருக்கு ஆளும் அதிகாரங்களை ஒப்படைக்கிறது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த வரைவின் மூலம், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் நீதித்துறை அதிகாரமும், மக்களின் நிறைவேற்று அதிகாரமும் மீறப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கா ரியவாசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா குறிப்பிட்டார்.

மேலும் இந்த வரைபு அடிப்படை உரிமைகள் மற்றும் மக்களின் உரிமையை மீறுவதாகவும் அவர் கூறினார்.

1Share