ஒரு நொடி பாரிஸ் நகரை உறைய வைத்த பயங்கர சத்தம்

38 0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் திடீரென குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்ற வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்திய நேரப்படி மாலை 4 மணி அளவில் பயங்கர குண்டு வெடித்தால் எப்படி சத்தம் கேட்குமோ? அதுபோன்று சத்தம் கேட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் நடைபெற்று வருகிறது. அதீத சத்தத்தால் விளையாட்டும் சில வினாடிகள் நிறுத்தப்பட்டன.
பின்னர் விசாரணையில் அதீநவின விமானத்தில் இருந்து வெளிப்பட்ட சத்தம்தான் இதற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.