சிறீலங்காவில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

430 0

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3365 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3230 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் 122 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.