2021 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்குச் சீரு டை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாகச் சீருடை துணியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதற்கான திட்டம் இருந்த போதி லும், சீருடை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளுக்கு அவசியமான துணிகளை வழங்கும் பொறுப்பை உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவதானம் செலுத் தியுள்ளார்.
இந்நிலையில், பாரிய மற்றும் சிறியளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உயர் தரத்திலான துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தங்கொட்டுவ, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
உள்நாட்டுத் துணி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவினங்களை 68 வீதத்தினால் சேமிக்க முடியுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

