தலங்கம, தலஹேன பகுதியில் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் இரு சாராருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பை தடுக்க சென்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
60 வயதான தலஹேன பகுதியில் வசித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

