பிரித்தானியாவின் இன்றைய பேரிடர் கால விதிமுறைக்கு அமைய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக அறவழி உண்ணாநோன்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள்.

387 0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு வணக்க நிகழ்வை, உலகத் தமிழினம் இன்றைய நாளில் நினைவேந்தி வருகின்றது. தாயகத்தில் நினைவேந்தலை தடுப்பதற்கு சிங்கள அரச இயந்திரம் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட சிங்கள நீதித்துறையின் ஆணை மூலம் தடைகளை பிரயோகித்த போதிலும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களின் உணர்வலைகளின் வெளிப்பாடாக தடைகளை உடைத்து தமிழர் தேசத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தலை, இராணுவ போலிசாரின் அச்சுறுத்தலின் மத்தியிலும் நினைவேந்தி வரும் சமநேரத்தில் தமிழகம் புலம்பெயர் தேசமெங்கும் அறவழிப் போரட்டங்களையும் வணக்க நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள்.

பிரித்தானியாவின் இன்றைய பேரிடர் கால விதிமுறைக்கு அமைய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஆறு பணியாளர்கள் இணைந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் திருஉருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி, அறவழி உண்ணாநோன்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள். இப்போராட்டம் பிற்பகல் 5 மணிக்கு உறுதி ஏற்புடன் நிறைவிற்கு வருகின்றது. இணையவளி ஊடாக பதினைந்தாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வு இறுதி நாளான இன்று சிறப்பாக அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயத்தில் இருந்து பிற்பகல் 7 மணிக்கு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் எழுச்சி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.