வடக்கில் சீதனக் கொடுமை

306 0

dowryவடக்கு மாகாணத்தில் சீதனைக் கொடுமையை உடனடியாக ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ புள்ளே வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனியார் சட்டங்களால் பெண்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள் திருமணம் முடிப்பதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 18 என நாட்டு சட்டம் கூறுகின்றது.

எனினும், அதனையும்விட குறைந்த வயதில் திருணம் முடிக்கும் உரிமையை சரியா சட்டம் வழங்குகின்றது.

எனவே, சிறார் திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்.

காணி உரிமை தொடர்பான சட்டங்களும் பரீசிலிக்கப்பட வேண்டும்.

அந்தச் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.

அதேவேளை, இன்று வட பகுதிகளில் சீதனக்கொடுமைஅதிகரித்துள்ளது.

சீதனம் வழங்காவிட்டால் திருமணம் இல்லை என்ற நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இந்த சீதனம் பெறும் நடவடிக்கையை இல்லாதொழிப்பதற்குரிய சட்டத்தை மகளிர் விவகார அமைச்சு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.