கிளிநொச்சி மக்களுக்குத் தேவை அதிகம்

289 0

sequence-01-still030கிளிநொச்சி மாவட்;டத்தில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவிலே காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்டத்தில் அதிக பயனாளிகளை இணைத்து உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்;ட மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து வெளியிட்டபோது,
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுமக்கள் உறவு என்பது மிக முக்கியமானது.
பொதுவாகவே கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவிலே காணப்படுகின்றன.

பிறப்பு சான்றிதழ் மரண சான்றிதழ் காணிகள் என பல்வேறு தேவைகளுடன் கூடிய மக்கள் வாழுகின்ற மாவட்டமாகவே இது காணப்படுகின்றது.

இவ்வாறான மக்களுக்கான சரியான பதில்களை வழங்க வேண்டிய விதத்திலே அரச உத்தியோகத்தர்களாகிய நாங்கள் நியமிக்கப்பட்டுள்ளோம்.

எனவே இதனை தட்டிக்களிக்காமல் மக்களுக்கு சரியான பதில் வழங்கும் பொறுப்புள்ளவர்களாக நாங்கள் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் அதிக பயனாளிகளை இணைத்துக்கொண்ட உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த ஓய்வூதிய திட்டத்தில் வடமாகாணத்தில் அதிக பயனாளிகள் இணைத்துக் கொண்ட முதன்மையான மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.

அத்துடன் இவ்வாண்டு அகில இலங்கை ரீதியிலே முதன்மையான இடத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் கிளிநொச்சி மாவட்டம் அமைந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு இலங்கை பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் வடபிராந்திய பணிப்பாளரின் ஏற்பாட்டில் குறித்த கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பயனாளிகளை இணைத்துக்கொண்ட கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் சான்றிதழ்கள் நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.