விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் கிழக்கில் பல தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டன!

231 0

2008 ம் ஆண்டு முதல் முஸ்லீம் தீவிரவாதிகள் ஆயுதமேந்திய தீவிரவாதம் குறித்த போதனைகளில் ஈடுபட்டுவந்தனர் என கிழக்கு மாகாணத்துக்கான முன்னாள் சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்து வந்தனர் என தெரிவித்துள்ள அந்த அதிகாரி அக்காலப்பகுதியில் உருவான 18 அமைப்புகளில் ஒன்றில் ஜஹ்ரான் என்ற நபரும் காணப்பட்டார் எனதெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்; ஹிஸ்புல்லா அரசியல்வாதி அதாவுல்லா போன்றவர்கள் இந்த அமைப்புகளுக்கு ஆதரவளித்தனர் எனவும் முன்னாள் சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவர் இந்த தீவிரவாதகுழுக்களைமுறியடிப்பது குறித்து அக்கறை காட்டினார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.