கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் வரும் 9ந்தேதி காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையில், பொதுக்குழு கூட்டம் நடத்துவதன் முன்னேற்பாடுகள் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கட்சியின் தலைமையிடமான அறிவாலயம் சென்றார். அதன்பின்
செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:-
* காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முறைபடுத்தியுள்ளோம். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி
இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளோம்.
* இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநில அணிகளின் அமைப்பாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 500 பேர் கலந்து கொள்கின்றனர்.
* வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது. தேர்தல் களத்தில் வரும்போது திமுகவின் பலம்
* கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு ஏற்கனவே தோல்வியடைந்துள்ளது. இப்போது முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
* வரும் 9-ம் தேதிக்கு பிறகு திமுகவின் பலம் தெரியும்
என தெரிவித்தார்.

