ஒரு முட்டையின் விலையை நாளை முதல் 2 ரூபாவினால் குறைப்பதற்கு நாட்டிலுள்ள அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் தீர்மானித்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வெள்ளை முட்டையின் மொத்த விலை 19.50 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 20 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை 21 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 22 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

