நீராடச் சென்ற 12 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு- மட்டக்களப்பில் சோகம்

468 0

மட்டக்களப்பு- வாகரை, மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்திலுள்ள குளத்தில் நீராடச் சென்ற சிறுமி, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில், தரம் 6 இல் கல்வி பயின்று வந்த சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) என்ற மாணவியே  உயிரிழந்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் காலிகோவில் வீதி 6ம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினியும் அவரது சகோதரியும் நேற்று மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்றபோதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.