பெண் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த குடு சம்பி என்று அழைக்கப்படும் ஹெட்டி ஆராய்ச்சிகே சம்பிகா (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருள் பல வருடங்களாக விற்கப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியும் இதுவரை காலமும் இப்பெண் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டத்துக்கு அமைவாகவே இவ்வாறான சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

