இனவாத சிறிலங்கா பயங்கரவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு அனைத்துலகத்திடம் நீதி வேண்டி இன்று 4.9.2020 வெள்ளிக்கிழமை சுவிசில் உள்ள ஐ.நா. சபை நோக்கிய மிதிவண்டிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்பிருந்து ஆரம்பமானது.
இவ்வேளையில் நெதர்லாந்து பாராளுமன்றத்தில் நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான தூதுவரை மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைச் சந்தித்து தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 20 தாவது தடவையாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன். தமிழின அழிப்பிற்கான நீதிகோரி ஜ. நா. நோக்கிய உந்துருளிப் பயணம் தொடர்கின்றது.


