மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால் இனி முன் ஜாமீன் கிடையாது – ஐகோர்ட் அதிரடி பதிவு

310 0

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது. மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. எனவே, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.