ஹெரோயின் நுகர்ந்த குற்றச்சாட்டில் 5 பேரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொக்குவில் கிழக்குப் பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக இளைஞர்கள் நிற்பதாக அப்பகுதி மக்களினால் கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் இந்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யும் போது அவர்களிடமிருந்து 210 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

