மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

