சிறிலங்காவில் ஷானி அபேசேகர உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

273 0

சிறிலங்காவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸ் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவரையும் இன்று (வியாழக்கிழமை) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.