உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் மாதம் ஆரம்பிகக் உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் மாதம் 10, 11 ஆம் திகதிகளில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தரா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரையும் முன்னாள் பிரதமரையும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டேன் என்று சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந் நிலையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றில் இரண்டு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

