கண்டி தலதா மாளிகை மீது நேற்றிரவு நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நைஜீரியாவிலிருந்தே நடத்தப்பட்டது என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
நேற்று மாலை இரு தடவைகள் நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் சில மணி நேரம் செயலிழந்த குறிப்பிட்ட இணையத்தளம் பின்னர் வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தாக்குலை நடத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதும் உடனடியாகக் கண்டறியப்படவில்லை.

