அச்செழு பாடசாலை நிர்வாகச் சீர்கேடு; வடக்கு ஆளுநரிடம் முறையீடு

351 0

அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக நேற்றுக் காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில்கலந்துகொண்டவர்கள்

பாடசாலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்,

தமிழர் ஆசிரியர் சங்கமே தவறானஆசிரியர்களை தவறாகவழிநடத்தாதே,

வடக்குமாகாணக் கல்வி அதிகாரிகளே ஊழல் புரிவோரை பாதுகாக்காதே,

வலயக்கல்விப் பணிப்பாளரே ஆசிரியர்களை தூண்டி அரசியல் செய்யாதே, மாணவர்களின் உணவுப் பொருட்களை திருடியவர்கள்மீது நடவடிக்கை எடு.

போன்ற வாசகங்கள் எழுதியபதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில்ஈடுபட்டனர்.

தங்களின் கோரிக்கைகளை பரிசீலனைசெய்து விரைவாக தீர்வை வடக்கு மாகாண ஆளுநர் பெற்றுத்தர வேண்டும்.  எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.  அத்தோடு, போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஆளுநர் செயலகத்தில் கையளித்தனர்