மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ‘மாவீரர் தின நினைவேந்தல்

346 0

dsc_00321தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல்’ நிகழ்வு இன்று(27) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.5 மணியளவில் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்திரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,அருட்தந்தையர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் தலைவர்,உபதலைவர்கள்,உறுப்பினர்கள்,ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் உற்பட மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள்,பொது அமைப்பின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள் உற்பட அனைவரும் தாங்கள் வைத்திருந்து தீப பந்தங்களை ஏற்றியதோடு மலர் மாலை தூவி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் ஓய்ந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தினை கைப்பற்றிய இராணுவத்தினர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் காணப்பட்ட மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட அனைத்து கல்லரைகளையும் உடைத்து சிதை;து சேதப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

dsc_00742 dsc_00971