நாடாளவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலைக ளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குண ரத்ன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 24 ஆம் திகதி திகம்பதானை யில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவின் வெ ள்ளி விழாவிற்குப் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், சட்ட விரோத செயற்பாடுகளைச் சிறைச் சாலையினுள் தடுக்கும் முகமாக ஜனாதிபதியின் பரிந் துரைப்பின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
அத்துடன் விமானப்படைக்குச் சொந்தமான வேவு விமா னங்களின் மூலம் காடுகளில் கஞ்சா செய்கைகளை மேற் கொள்ளும் கும்பல்களை இனங்காண்பதற்காகவும் புல னாய்வு பணிகளும் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரி வித்தார்.
இராணுவ தளபதி ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,
ஜனாதிபதியின் வழிக்காட்டுதலின் கீழ் ஏப்ரல் மாதத் திற்கு முன்பு நாட்டில் ஏற்பட்ட கோவிட் – 19 கொ ரோன தொற்று நோயை சுகாதார அதிகாரிகள் மற் றும் பாதுகாப்புப் படையினரது ஒத்துழைப்புடன் எம் மால் கட்டுபாடிற்குள் கொண்டுவர முடிந்தது. ஆனால் சிலர் வெளிநாட்டவர்களை எமது நாட்டிற்கு அழைத்து வரவில்லை என தெரிவிக்கின்றனர்.
ஆனால் நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 300 -400 பேர் எமது நாட்டிற்கு வருகை தருகிறார்கள்.இவர்கள் பரிசோ தனையின் பின்பு தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7ஆயிரத்து 653 பேர் தங்க வைக்கப்பட்டு இவர்களுக்கான அனைத்து வசதிகளும் எமது அரசினால் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சுகா தார வழிக்காட்டுதலின் கீழ் இந்த கொ ரோனா தொற்று நோயி லிருந்து விடுவிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

