மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்பியுமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (23) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் முஷர்ரப் முது நபீன் எம்பி, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.