இந்திய மீனவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி குறித்து இலங்கை ஆராய்வு

5576 0

fishman 56564656இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழ் நாட்டை சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் இலங்கை கடற்பரப்பில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதிப்பத்திரம் வழங்குவதன் ஊடாக அந்த எண்ணிக்கையை 250 ஆக குறைக்க முடியும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இந்திய இழுவைப் படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் தகவல் வெளியாகியிருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெற்றியாராட்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை இது குறித்து இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதி வழங்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரி வருகிறது.
எனினும், இது தொடர்பில் இலங்கை உரிய பதிலை இதுவரை வழங்கவில்லை.
அப்படியான அனுமதியினை இலங்கை வழங்குவதானால் மீனவ சமூகத்துடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment