பிரிட்டனில் பலத்த காற்று வீசியபோதும் விமானி ஒருவர் விமானத்தை சாதுர்யமாக பக்கவாட்டில் தரையிறக்கி அசத்தி உள்ளார்.
பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு சமீபத்தில் போயிங் ரக விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை சமாளித்து விமானத்தை ஓடுபாதையில் நேராக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அப்போது, விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கினார். ஓடுபாதையின் குறுக்கே பக்கவாட்டில் விமானத்தை தரையிறக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

