கொரோனா வைரஸ் பரவுவதால் நாடு முழுவதிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொண்ட வேலைத் திட்டத்தை இடைநீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசா லைகளையும் வழக்கம் போல் பராமரிக்குமாறு கல்வி அமைச்சின் செய லாளர் நேற்று அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
அதன்படி, திட்டமிட்ட கால அட்டவணையின்படி பாடசாலை நடவடிக்கை களைக் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே நடத்து மாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், தற்போது சில வகுப்புகள் பிற்பகல் 3.30 மணி வரை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

