நாமலை தலைவராக்கும் திட்டத்தில் மகிந்த!

298 0

mahinda_namal_miniமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் பதவியை தற்காலிகமாக வகித்து விட்டு அதனை நாமல் ராஜபக்சவுக்கு வழங்க திட்டமிடுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் வெளியானதை அடுத்து மகிந்த தரப்பின் முன்னணி தலைவர்களுக்கு இடையில் பாரதூரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த வாரம் பசில் ராஜபக்சவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான மோதல் வெளியில் தெரியவரும் வகையில் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவை பலவந்தமாகவேனும் கட்சியின் தலைவர் பதவிக்கு எடுக்க போவதாக பசில் ராஜபக்ச ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

இது குறித்து மகிந்த ராஜபக்ச முரண்பாட்டுடன் கோப சுபாவத்தில் ஊடகங்களுக்கு பதிலளித்தார். மோதல் உச்சமடைந்திருப்பதன் பிரதிபலனாகவே மகிந்தவின் அந்த பதில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

பத்தரமுல்லையில் மகிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலகத்தை பசில் ராஜபக்ச பயன்படுத்துவதாகவும் அலுவலகத்தை கொண்டு நடத்த தன்னிடம் பணம் இல்லை எனவும் தற்போது அந்த அலுவலகத்தில் அறை ஒன்றை வாடகைக்கு எடுக்க வேண்டியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

மகிந்த மற்றும் பசில் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள பின்னணியிலேயே மகிந்த ராஜபக்ச சீனா சென்றுள்ளதாகவும் நாமல் ராஜபக்சவை அடிப்படையாக கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.