பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தகவல் தொழில்நுட்ப முறைகள் ஊடாக…..

250 0

ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான தெரிவு செய்யப் பட்ட அமைச்சர்களின் விபரங்களை ஒன்லையின் முறை மூலமாக (Online Registration System) பெற பாராளுமன்ற செயல காரியாலயத்தினால் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பாராளுமன்றத்தின் அனைத்து அமைச்சர் களும் தங்களின் தகவல்களை வழங்கப் பாராளுமன்றத் தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு ஒன்லைன் மூலமாக விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் செயல்முறை 15 ஆம் திகதிக்கு முன்னர் செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் அறிவித்தார்.

கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கவனத்திற் கொண்டு தற்போது பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தகவல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலமாக தகவல் கள் பெறப்படுகின்றன என பொதுச்செயலாளர் தெரி வித்தார்.