மஹிந்த தரப்பு குற்றச்சாட்டுக்கு மலிக் மறுப்பு

367 0

malikமஹிந்த அணியினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம நிராகரித்துள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் விற்பனையில் 1000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறைக்கேடு இடம்பெற்றதாகவும், இதற்கு அமைச்சரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மஹிந்த அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார்.