தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ‘வாக்களிக்க முடியாது’

224 0

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையெனத் தெரிவித்த, வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (3)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலில் 14 நாள்களுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தலில் இருந்தவர்களும் கொரோனா சிகிச்சைப் பெற்று வீடுகளுக்குத் திரும்பியவர்களும் வாக்களிப்பு தினத்தன்று மாலை 4 மணிக்கு பிறகு தமது வாக்குகளை அளிக்கலாம் என்றார்.

அவ்வாறான வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு, விசேட கூடமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது மாத்திரம் சுகாதாரப் பிரிவின் அதிகாரியொருவர் உதவித் தேர்தல் அதிகாரியாக செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறு வாக்களிக்க வருபவர்கள் பொது வாகனங்களைப் பயன்படுத்தாமல் தமக்கான தனியான வாகனத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.