மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு

338 0

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் 2020 தொடர்பில் ;மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு நேற்று (2) மாலை யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் விடுதி மண்டபத்தில் இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வி. மணிவண்ணனை ஆதரித்து இடம் பெற்ற இக்கருத்தாடல் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட் ட இளைஞர்கள் முதியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள் பலரும் தமது ஆதரவை தெரிவித்து பங்கு கொண்டதுடன் எதிர்கால அரசியல் குறித்த விடயங்களை அறிந்தும் தெரிந்தும் கருத்துக்களை முன்வைத்து கேள்வி பதில் அமர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..

இந்நிகழ்வு தேர்தல் அரங்கில் மிக முக்கியமானதும் வித்தியாசமானதுமான நிகழ்வு என பலராலும் பாராட்டும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.