சிறிலங்காவில் இதுவரை தேர்தல் தொடர்பாக 2095 முறைப்பாடுகள் பதிவு

231 0

 சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக 2,095 முறைப்பாடுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு  அறிவித்துள்ளது.

பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  சட்டவிரோத பிரசாரம் தொடர்பாக 1,230 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 1,084 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 4,931 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி பொதுத்தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல், தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.