ஆட்பதிவுத்திணைக்களத்தின் இடமாற்றத்தால் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள்(படங்கள்)

307 0

id-office-005ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் பத்தரமுல்லை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்லை பகுதியிலுள்ள புதிய கட்டடமொன்றுக்கு ஆட்பதிவு திணைக்கள அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தருகின்ற மக்களுக்கு போதியளவு இடவசதிகளை கிடையாது என உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் கபே அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு போதியளவு வசதிகளை செய்ய முடியாதுள்ளமையினால், அலுவலகத்தை புனரமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கான சேவையை பெற்றுக் கொள்வதற்காக இன்றைய தினமும் பெருந்திரளானோர் மக்கள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருகைத் தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு வருகைத் தந்த மக்கள் அமர்ந்திருப்பதற்கு போதிய வசதிகள் இன்மையினால், ஆங்காங்கே அமர்ந்திருந்ததைவும் அவதானிக்க முடிந்துள்ளதாக கபே அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்திற்கு சேவையை பெற்றுக் கொள்வதற்காக வருகைத் தருகின்ற மக்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இலத்திரனியல் அடையாள அட்டை விநியோக கேள்வி மனுக்கோரலில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மோசடி சம்பவத்திற்கும், அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் குமார பதவி விலக்கப்பட்டமைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என அமைச்சின் செயலாளர் டி.சுவர்ணபால கூறியுள்ளதாக கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

id-office-001 id-office-002 id-office-004 id-office-003