பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர்!

53 0

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த தமிழரான பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பிரியாவின் உடல்நிலை மோசமடைகின்றது இதன் காhரணமாக அவரை கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டுசெல்லக்கூடாது என மருத்துவர்கள் வாதிட்டுவந்த நிலையிலேயே அதிகாரிகள் அவரை பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியாவை மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்லதிட்டமிட்டிருந்தனர்,ஆனால் அதற்கு சில மணிநேரத்துக்கு எல்லை காவல் படையினர் தலையிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரை விமானநிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றவேளை அவரின் சார்பில் கருத்து வெளியிடும் தமிழ் அகதிகள் பேரவையின் அரன் மயில்வாகனம் பிரியாவுடன் பேசுவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

அரனை பிரியா தொடர்புகொள்ள முயன்றவேளை அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்திலிருந்து பிரியாவின் அலறல் சத்தத்தை கேட்டதாக அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.