ஆவுஸ்திரேலியாவில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு

4715 0

201607031218346667_Australian-elections-result-in-no-majority-party-raising_SECVPFஆவுஸ்திரேலியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நேற்று ஓட்டுபதிவு முடிந்ததும் மாலையிலேயே ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. இரவில் முடிவுகள் வெளியாக தொடங்கின.தொடக்கத்தில் இருந்தே முடிவுகள் இழுபறியாக ஊசலாட்டத்துடனே வெளியாகின. லிபரல் கட்சியின் கூட்டணி இத்தேர்தலில் அமோக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அக்கூட்டணி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட 3 சதவீதம் வாக்குகள் பின் தங்கியே இருந்தது. லிபரல் கூட்டணி 69 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 70 இடங்களிலும், கிரீன்ஸ் கட்சி மற்றும் சுயேச்சைகள் தலா 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு பாராளுமன்றமே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆஸ்திரேலியாவில் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மால்கம்டர்ன்புல் அறிவித்து இருந்தார்.அதற்கு பொது மக்களிடம் ஆதரவு இருந்தது. எனவே, இக்கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான முடிவின்படி மீதமுள்ள இடங்களில் 16 தொகுதிகளை இக்கட்சி கைப்பற்றும் என தெரிகிறது. இருந்தாலும் தனிமெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கருதப்படுகிறது. இது லிபரல் கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a comment