அதிகரிக்கப்பட்ட தண்டப்பணத்தின் விளைவு!

292 0

dublicateசாரதி அனுமதிப்பத்திரம் இல்லையென்றால் தண்டப்பணமாக 25000 ரூபா அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, இதுவரை இல்லாதவாறு பல போலி முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்காக பலர் போட்டிபோட்டுக் கொண்டு குறித்த அலுவலகங்களை முற்றுகையிடுவதாகவும் அறியமுடிகின்றது.சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு வைத்திய அறிக்கை பெறுவதென்பது முக்கியமான விடயமாகும்.

இதனால் வைத்திய அறிக்கையை பெற தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு வருவோரின் எண்ணிக்கை ஏனைய நாட்களை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய நுகேகொடையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பிரதான அலுவலகத்திற்கு இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 340 – 350 பேர் மட்டுமே வருகைத்தருவார்கள்.

ஆனால் அரசாங்கம் அறிவித்த சட்டத்திற்குப் பிறகு தற்போதுவரையில் அங்கு வருவோரின் எண்ணிக்கை 700 ஆக பதிவாகியுள்ளதென அதன் தலைவர் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் உள்ள 25 கிளைகளின் அலுவலகத்திலும் வைத்திய அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக வருகைத்தருவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.

சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் என இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் பலர் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாகுவதனால் இவ்வாறு வைத்திய அறிக்கை பெற்றுக் கொள்ள வருவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.