அமர்நாத் யாத்திரை: 2021 யாத்ரீகர்கள் கொண்ட மூன்றாவது குழு

10888 0

201607031457058587_Fresh-batch-of-2021-pilgrims-leave-for-Amarnath-yatra_SECVPF (1)அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 2021 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்று (2-ஆம் தேதி) தொடங்கியது.
60-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக இன்றைய குழு புறப்பட்டுச் சென்றது. 1505 ஆண்கள், 366 பெண்கள், 150 சாதுக்கள் என 2021 யாத்ரீகர்கள் கொண்ட மூன்றாவது குழு இன்று காலை 4.40 மணியளவில் ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து 40 வாகனங்களில் புறப்பட்டு சென்றது.

இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4,517 யாத்ரீகர்கள் ஜம்மு மலையடிவாரப் பகுதியில் இருந்து குகைக்கோயிலை தரிசிப்பதற்காக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment