சுவாதி கொலையில் சாதித்துக் காட்டிய காவல்துறை

486 0

201607031430546807_Swathi-murder-case-police-smart-investigation_SECVPFசுவாதி கொலையில் சிறப்பாக விசாரணை நடத்திய 2 இணை கமி‌ஷனர்கள், 3 உதவி கமி‌ஷனர்கள் உள்பட 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படையினருக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் பாராட்டி உள்ளனர்.

சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டது. கூடுதல் கமி‌ஷனர் சங்கர் தினமும் கொலை வழக்கு பற்றி தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளிடம் கேட்டு விசாரணையை முடுக்கி விட்டு கொண்டே இருந்தார்.

இணை கமி‌ஷனர்கள் மனோகரன், அன்பு, துணை கமி‌ஷனர்கள் சரவணன், பெருமாள், கூடுதல் துணை கமி‌ஷனர் பாலசுப்பிரமணியம், உதவி கமி‌ஷனர்கள் தேவராஜ் (நுங்கம்பாக்கம்), முத்துவேல் பாண்டி (திருவல்லிக்கேணி), கலிதீர்த்தான் (எழும்பூர்) ஆகியோரும் தனிப்படையில் இடம் பெற்றிருந்தனர்.

இது தவிர இன்ஸ்பெக்டர்கள் பாரதி (நுங்கம்பாக்கம்), ஆனந்த்பாபு (எழும்பூர்), ரவிக்குமார் (மயிலாப்பூர்), மதியழகன் (சூளைமேடு), மில்லர் (தலைமை செயலக காலனி), சந்த்ரு (வளரசவாக்கம்), விஜயகுமார் (ஆயிரம் விளக்கு), யுவராணி (மயிலாப்பூர் மகளிர் போலீஸ்) மற்றும் இன்ஸ்பெக்டர் குமரன், மெல்வின் ஆகிய 10 பேரும் தனிப்படையில் சிறப்பாக பணியாற்றினர்.

ஒவ்வொரு தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 7 போலீசார் இருந்தனர். அனைவரும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்தனர். இதுவே சுவாதி கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசாருக்கு அரசியல் கட்சி தலைவருகளும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட இணையதளங்களிலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

Leave a comment