பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன்-யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை .

638 0

பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்களுக்கு எமது தோழமையை தெரிவிக்கின்றோம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை .
“நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராக தான் கடமையாற்றுவது இயலாத விடையமென்றும் தனது சட்டத் தொழில் மூலம் தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் ஊடாட்டமும் தனது ஆசிரியப் பணியில் இணை பிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியை தரமாட்டாது” என்றும் யாழ் பல்கலை. சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் பதவியைத் துறந்து கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தமிழ்த் தேசிய அரசியலை எந்தவித அடக்குமுறையாலும் நசுக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார்.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் யாழ் பல்கலை. சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளராக பணிபுரிந்தாலும் தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு பல்கலைக்கழக பேரவை தடை செய்துள்ளமையை காரணமாக தனது விலகல் கடிதத்தில் காரணம் காட்டியுள்ளார்.

கடந்த பல வருடங்களாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் நீதிக்காக போராடும் மக்களுக்கு நேர்மையான கருத்துக்களை விதைத்து வருவது யாவரும் அறிந்ததே. அதேபோன்று கடந்த ஆண்டுகளாக சர்வதேச அரசியல் தளங்களிலும் தமிழ் சிவில் சமூகம் சார்பாக தமிழின அழிப்பிற்கு நீதிகோரும் பன்னாட்டு சுயாதீன விசாரணையின் அவசியத்தையும் , ஈழத்தமிழர்களுக்கு தாமதிக்கப்படும் பரிகார நீதியை வலியுறுத்தியும் வந்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழகத்தில் வெறுமனே ஒரு சட்ட ஆசிரியராக மட்டும் அல்லாமல் உயர்கல்வி மாணர்வர்களுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பின் முக்கியத்துவத்தையும் அதற்கு மாணவர் சமூகமாக ஆற்ற வேண்டிய கடமையையும் பல அரங்குகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் நாவற்குழி காணாமல் போனோர் விவகாரத்தில் இராணுவத்திற்கு எதிராக வழக்கை தொடர்ந்தது அவர் மீது பல்கலைக்கழக உயர்பீடத்தால் அழுத்தங்கள் எழும்ப தொடங்கியது.

சிங்கள பேரினவாத அரச இயந்திரங்கள் ஈழத்தமிழர் மீது தொடரும் இன அழிப்பின் வடிவங்களில் இதும் ஒன்றாகவே நாம் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தையும் அத்தோடு அவர் சட்டத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு பல்கலைக்கழக பேரவை விதித்திருக்கும் தடையையும் நாம் கருத்த வேண்டும்.

இவ் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சமூகத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள், புத்தியீவிகள் , மக்கள் அனைவரும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என இத்தருணத்தில் நாம் வேண்டி நிற்பதோடு கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்களுக்கு எமது தோழமையை தெரிவித்து நிற்கின்றோம்.