சிறிலங்காவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பீரிஸ் பிணையில் விடுதலை!

264 0

சிறிலங்காவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர்.பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி உத்தரவிட்டார்.

ஆர்.பீரிஸ், தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.