கதிர்காமம் புனித பூமிக்கு பொது மக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

248 0

கொவிட் 19 தொற்று காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கதிர்காம புனித பூமிக்கு பொது மக்கள் வருவது எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆடி வேல் விழாவில் பெரஹர நடைபெறும் முழுமையான கால எல்லை மக்களுக்கு பார்வையிடுவதற்கோ கலந்துகொள்வதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் மொனராகலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழா இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கொவிட்-19 ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கி சுகாதாரப் பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி இம்முறை கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.